விபத்தில் மூளைச் சாவு ஏற்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் 9 பேருக்குத் தானமாக ஹெலிகாப்டரில் கொண்டு வந்து பொருத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கடூர் தாலுக்கா சோமனஹல்லி தண்டலை பகுதியில் வசித்து வந்தவர் ரட்சிதா. ரட்சிதாவுக்கு சில நாட்களுக்கு முன் விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்த விபத்தில் அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் எவ்வளவு போராடியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
அதனைத் தொடர்ந்து ரட்சிதாவின் பெற்றோர் மகளின் உடல் உறுப்பினை தானம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
மங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ரட்சிதாவின் உடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சிறுநீரகம், கல்லீரல், கண் உட்பட பல உறுப்புகள் எடுக்கப்பட்டு, ஹெலிகாப்டர் மூலம் பல்வேறு மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
போலீசார் உதவியுடன் போக்குவரத்தினை மிகவும் எளிதில் கையாண்டுள்ளனர்.
ரட்சிதாவின் உடல் உறுப்புகள் 9 பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது, ரட்சிதாவின் உயிர் பிரிந்தாலும் அவரது உறுப்புகள் மற்றவரின் குடும்பத்தில் உயிர் வாழும் என்று பெற்றோர் கூறி கதறி அழுகின்றனர்.
ரட்சிதாவின் உடன் படித்த சக மாணவ- மாணவிகள் மாணவி ரட்சிதா உயிர் இழந்தது குறித்து கதறி அழும் வீடியோ நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.