சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டம்

இந்தியாவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக வெடிகுண்டு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து உளவுத்துறை அளித்துள்ள அறிக்கையில், இந்திய எல்லைப் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்துவதற்காக பல ஆளில்லா விமானங்களை அனுப்ப பாகிஸ்தான் முயன்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

அபுதாபியில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்று தாக்குதல் நடத்தினாலும், அவற்றுக்கு ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா போன்ற அமைப்புகள் பொறுப்பேற்றுக் கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னோட்டமாகத்தான் டெல்லியில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதாகவும், காஜிபூர், ஸ்ரீநகர், அட்டாரி மற்றும் குர்தாஸ்பூர் போன்ற இடங்களில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதையும் உளவுத்துறை சுட்டிக் காட்டியுள்ளது.