11 வகுப்பு மாணவியை கடத்தி துஸ்பிரயோகம் செய்த நபர்

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியில் வசிப்பவர் முத்து (36). இவர் அப்பகுதியில் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். அவருக்கு அந்த பகுதியை சேர்ந்த 11 ம் வகுப்பு பெண் மீது ஆசை இருந்துள்ளது.

இந்நிலையில், சம்பவதன்று தனியே சென்ற அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தன்னுடன் வருமாறு கேட்டுள்ளார்.ஆனால் அந்த சிறுமி அதற்கு மறுக்கவே அவரை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

இதனை யாரிடமும் சொல்ல கூடாது எனவும் மிரட்டியுள்ளான். இந்நிலையில், வீட்டிற்கு சென்ற சிறுமி தனது தாயிடம் இது பற்றி கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்ட அவரது தாய் அதிர்ச்சியடைந்தார்.

இந்நிலையில், இது குறித்து அந்த சிறுமியின் தாய் பொலிஸ்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு முத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.