fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

திருமணம் படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது

சேரன் இயக்கிய திருமணம் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சேரன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில்  உமாபதி ராமையா கதாநாயகனாகவும்,  காவ்யா சுரேஷ் கதாநாயகியாகவும், முக்கிய வேடத்தில்  தம்பி ராமையா, எம். எஸ். பாஸ்கர், சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள் . இப்படமானது  மார்ச் மாத துவக்கத்தில் வெளியானது. அப்போது, இப்படத்துடன் 90 எம்எல், தடம், தாதா 87 ஆகிய படங்களும் வெளியாகின.

திருமணம் படத்தில் குடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் செயல்கள் , சென்டிமெண்ட் என நல்ல கதைகளமும், அருமையான விமர்சனங்களும் கிடைத்த போதும், இப்படத்தை பார்க்க மாணவ மாணவிகளுக்கு தேர்வுகள் இருந்ததால் மக்கள் பெருமளவில் வர முடியாத நிலையில் இருந்தார்கள். திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகளும் கிடைக்காவில்லை, அதனால் பல இடங்களில் திரையிட முடியவில்லை. பெரும்பாலான தியேட்டர்களில் 90 எம்எல் படமே திரையிடப்பட்டது.  ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் அருண் விஜய்யின் தடம் திரைப்படத்தின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டன.

பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்கவும் , திரையரங்குகளின் ஒத்துழைப்போடும், இத்திரைப்படமானது  வருகின்ற ஏப்ரல் 12 ஆம் தேதியில் 75 திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

Related posts

ஷூட்டிங் ஸ்பார்ட்டில் கீர்த்தி சுரேஷுக்கு கேக் ஊட்டும் ரஜினி

TamilTwin India

நம்ம வீட்டு பிள்ளை படத்தின் பாடல்

N N

ரிலீஸாகிறது சித்ரா நாயகியாக நடித்துள்ள திரைப்படம்..!! இணையத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!!

TamilTwin India