fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கான காரணங்கள்

நுரையீரலில் நோய்த்தொற்று இருந்தால் அது ஆஸ்துமாவைத் தூண்டும். ஆஸ்துமா வருவதற்கான முக்கிய காரணங்கள் அலர்ஜி, தூசி, குளிர்ந்த காற்று மற்றும் செல்லப் பிராணிகளிலிருந்து உதிரும் முடி போன்றவை ஆகும்.  ஆனால் இது தவிர ஆஸ்துமாவிற்கான இரண்டு வகையான முக்கிய காரணங்கள்  உள்ளன.

ஒன்று அலர்ஜிகல் மற்றொன்று நான் அலர்ஜிகல் என்று கூறப்படுகிறது. அலர்ஜியானது காற்று தூசு, வெளியில் உள்ள காற்று மாசு, அதிக குளிர்ச்சி இது தவிர அடிக்கடி சளி பிடிப்பது, அடுக்குத் தும்மல், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றுக்கு முறையாக சிகிச்சை எடுக்காதபட்சத்தில் இவை ஆஸ்துமாவுக்கு வழி அமைத்துவிடும்

குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கான காரணங்கள்

பெற்றோர்களுக்கு ஆஸ்துமாவானது இருக்கும் நிலையில் பிள்ளைகளுக்கும் வரும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. சைனஸ் மற்றும் அதிக சளித் தொல்லையால் அவதியுறும் குழந்தைகளுக்கும் டான்சில் எனப்படும் தொண்டையில் வளரும் சதையின் அளவைப் பொறுத்தும் ஆஸ்துமா வருகிறது. இவை அனைத்துமே ஒன்றோடொன்று தொடர்புடையவை.

பொதுவாக சிறிய வயதிலேயே ஆஸ்துமாவானது ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு மரபியல் மற்றும் அலர்ஜியே ஆஸ்துமா வருவதற்கான முக்கியமான காரணமாகும். ஆனால், இது குழந்தையின் 6 வயதுக்குள் குணமடையவும் வாய்ப்புகள் அதிகம். இது தவிர குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆஸ்துமா ஏற்படுவதற்கான முக்கியமான காரணம் சுற்றுச்சூழல் மாசு அடைவதே ஆகும்.

Related posts

முடி உதிர்கிறதா? 2 பொருள் போதுமே!!!!

N N

முக அழகினைக் கூட்டும் சூப்பரான ஃபேஸ்பேக் செய்வது எப்படி?

TT Media

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க செம்பருத்திச் செடி

N N