Thursday, December 1, 2022
HomeNews and Viewsஇந்தியச் செய்திகள்வாட்ஸ் ஆப் பார்வேடு மெசேஜால் போன உயிர்.. இளைஞருக்கு நிகழ்ந்த பரிதாபம்!

வாட்ஸ் ஆப் பார்வேடு மெசேஜால் போன உயிர்.. இளைஞருக்கு நிகழ்ந்த பரிதாபம்!

சமூக வலைதள மருத்துவக் குறிப்பால் செங்காந்தள் செடியின் கிழங்கைச் சாப்பிட்டு இளைஞர் உயிர் இழந்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள மின்னூரைச் சார்ந்தவர் லோகநாதன், இவரின் நண்பர் ரத்தினம்.

வாட்ஸ் ஆப்பில் மருத்துவக் குறிப்புகள் வரும் பட்சத்தில் இதனை முயற்சித்துப் பார்ப்பது இவர்களின் வழக்கம்.

அந்தவகையில் வாட்ஸ் ஆப்பில் செங்காந்தள் செடியின் கிழங்கைச் சாப்பிட்டால் உடல் மினுமினுப்பாகும் என்ற குறுஞ்ச்செய்தியினைப் பார்த்துள்ளனர்.

இதனை இவர்கள் அவர்களின் நெருங்கிய நண்பர்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் பார்வேர்டு செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஊரின் அருகே செங்காந்தள் தோட்டம் இருப்பதால் தாங்கள் இந்த மருத்துவக் குறிப்பை முயற்சித்துப் பார்க்கலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி நண்பர்கள் இருவரும் செங்காந்தள் செடியின் கிழங்கைச் சாப்பிட்டுள்ளனர்.

கிழங்கைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

அருகில் இருந்தவர்கள் லோகநாதன் மற்றும் இரத்தினத்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

சிகிச்சைப் பலனின்றி லோகநாதன் உயிர் இழந்தநிலையில் ரத்தினம் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

RELATED ARTICLES

Most Popular