இலங்கையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முக்கிய அறிவிப்பு நாளை

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான நடைமுறை குறித்து நாளை அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ஆறாம் வகுப்பு வரையான மாணவர்களிற்கு முதலில் பாடசாலைகளை ஆரம்பிக்கவேண்டுமா அல்லது 7ம் வகுப்பு முதல் 13 வரையிலான மாணவர்களிற்கு பாடசாலைகளை முதலில் ஆரம்பிக்கவேண்டுமா என்பது குறித்து நிபுணர்கள் ஆராய்ந்துவருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களிற்கு நிபுணர்களுடன் உதவியுடன் தடுப்பூசிகளை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாளை இது குறித்த முக்கிய கலந்துரையாடல் இடம்பெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.