சில நாட்களுக்கு நாட்டை முழுமையாக மூடுவதற்கு யோசனை

சில நாட்களுக்கு நாட்டை முழுமையாக மூடிவிடுமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

எரிபொருள் தட்டுப்பாட்டால், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மின் வெட்டால், வர்த்தக நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாத அச்சம் ஏற்பட்டுள்ளது. பல தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆகையால் சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே நாளை காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை நாடளாவிய ரீதியில் 10 மணித்தியாலங்கள் மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க இரண்டு நாள் விடுமுறையை அறிவிக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.