Tuesday, September 27, 2022
HomeNews and Viewsஇந்தியச் செய்திகள்முதல் மனைவியின் கிட்னியை விற்று காதலியுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கணவன்!

முதல் மனைவியின் கிட்னியை விற்று காதலியுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கணவன்!

முதல் மனைவியின் கிட்னியை விற்று இரண்டாவது மனைவியுடன் கணவர் வாழ்ந்த சம்பவம் ஓடிசாவில் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் மல்கான்கிரி மாவட்டத்தில் உள்ள கட்டமீத்தா என்ற கிராமத்தைச் சார்ந்தவர் பிரசாந்த்.

இவர் அதே ஊரில் வசிக்கும் ரஞ்சிதா என்ற பெண்ணை காதலித்து 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்தநிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.

பிரசாந்த் பெரிதாக வேலை எதற்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார், இதனைத் தொடர்ந்து மனைவி ரஞ்சிதாவின் கிட்னியை விற்க திட்டம் தீட்டியுள்ளார்.

ரஞ்சிதாவுக்கும் அவ்வப்போது வயிற்று வலி ஏற்பட்டுவருவதாக அவர் சொல்ல இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தினார்.

அதாவது ரஞ்சிதாவுக்கு கிட்னியில் கல் இருப்பதாகக் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கல்லை அகற்ற வேண்டும் என்று கூறி கிட்னியை எடுத்துள்ளார்.

அதன்பின்னர் கிட்னியை விற்ற பணத்தில் பெங்களூரில் தான் காதலித்து வந்த பெண்ணுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

ரஞ்சிதாவுக்குத் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுவர மருத்துவமனையில் பரிசோதித்துப் பார்க்கையில் ஒரு கிட்னிதான் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் ரஞ்சிதா கணவர்மீது போலீசில் புகார் கொடுக்க பெங்களூர் போலீசார் பிரசாந்தைக் கைது செய்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular