fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

405 அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கவேண்டும்- ராமதாஸ் கருத்து!!

தமிழக மருத்துவ கல்வி இயக்ககம் 2020-2021 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வினை 18 ஆம் தேதி நவம்பர் நடத்தியது. சமீபத்தில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதாக தமிழகக் கவர்னர் ஒப்புதல் அளித்தார்.

இந்தநிலையில் மருத்துவக் கல்வியில் இடம் பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

405 அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கவேண்டும்- ராமதாஸ் கருத்து!!

ராமதாஸ் கூறுகையில், “மருத்துவக்கல்வி சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடானது வழங்கப்பட்டுள்ளது இதனால் தனியார் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமாக 166 மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

தனியார் கல்லூரி கட்டணத்தை அரசுப் பள்ளி மாணவர்களால் செலுத்துவது என்பது கடினமான ஒன்றாகும். அதனால் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இடம் பெற்றுள்ள மாணவர்களின் மருத்துவக் கல்லூரி கட்டணத்தை அரசாங்கமே ஏற்க வேண்டும்.

தனியார் பள்ளிகளில் குறைந்தது ரூ.8 லட்சம் ரூபாய் செலவாகும் என்பதால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தாலும், அவர்கள் மருத்துவப் படிப்பினைத் தொடர்வதற்கான வாய்ப்பு கேள்விக் குறியில் அமைந்துவிடும்.

இதனால் இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் இடம்பெற்றுள்ள 405 மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

Related posts

கேரள விமான விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

World News

பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரிப்பு- மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு

TT Media

ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரம் (Video)

World News