களு கங்கையில் நீராடிய நால்வர் மூழ்கினர்

சிறிபாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஶ்ரீ பாலபந்ததல பகுதியில் களு கங்கையில் நீராடிக் கொண்டிருந்த நால்வர் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களில் ஒருவர் உயிருடன் காப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் நீரில் மூழ்கிய இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதுடன் 10 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்குராவதொட்ட பகுதியை சேர்ந்த 22 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் காணாமல் போன சிறுவனை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் சிறிபாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.