fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படம் தமிழில் ரீமேக்

உலக சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத படம் சில்ட்ரன் ஆஃப் ஹெவன். மஜித் மஜிதி இயக்கிய இந்த ஈரான் படம் இரானில் வாழும் ஒரு ஏழைக் குடும்பத்தின் வாழ்க்கையை உணர்வு பூர்வமான காட்சிகளால் விவரிக்கும் 1998 ல் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

சில்ட்ரன் ஆஃப் ஹெவன்  படம் தமிழில் ரீமேக்

     இந்தப் படம் விரைவில் தமிழிலும் வெளிவரவுள்ளது. இந்த படத்தின் ரீமேக்கை வாங்கி இயக்கியுள்ளார் உயிர், மிருகம், சிந்து சமவெளி படங்களை இயக்கிய சாமி. சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் தமிழ் ரீமேக்குக்கு அக்கா குருவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. கொடைக்கானல் அருகில் உள்ள பூம்பாறை எனும் இடத்தில் முழுப்படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. அண்ணன் தங்கையின்  பாசப் போராட்டத்தை கவிதையான காட்சிகளால் வெளிப்படுத்தும் இந்தப் படம் தமிழ் ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொள்ளும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

    அக்கா குருவி படம் மே மாதம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெளி வருகிறது. இந்த படம் பெறும் வெற்றியடையும் என்று எதிர்ப்பார்கப்படுகிறது.

Related posts

சிம்ரனை வர்ணனை செய்யும் பார்த்திபன்

TamilTwin India

இறுதி காட்சிக்காக மட்டும் ரூபாய் 2 கோடி செலவு செய்யும் கென்னடி கிளப்

N N

விதார்த்தின் ஆயிரம் பொற்காசுகள் கோடையில் ரிலீஸ்

N N