Thursday, December 1, 2022
HomeNews and Viewsஉலகச் செய்திகள்20 வருட வாழ்க்கையினை 2 நிமிடத்தில் வீடியோவாக எடுத்து மகளுக்குப் பரிசளித்த தந்தை!

20 வருட வாழ்க்கையினை 2 நிமிடத்தில் வீடியோவாக எடுத்து மகளுக்குப் பரிசளித்த தந்தை!

மகளின் 20 வருட வாழ்க்கையினை 2 நிமிட வீடியோவாகப் பதிவிட்டு மகளுக்குப் பரிசாக அளித்த தந்தை குறித்து மக்கள் நெகிழ்ந்து போய் உள்ளனர்.

டச் நாட்டைச் சார்ந்தவர் ஹென்ரிக், இவருக்கு அலிடா என்ற மகள் உள்ளார்.

மகள் பிறந்தது முதல் ரசித்து ரசித்து புகைப்படங்களை எடுத்து வந்துள்ளார் ஹென்ரிக்.

ஒரு கட்டத்தில் இவர் இந்த வீடியோ பதிவை பின்னாளில் மகளுக்கு வீடியோவாகப் பதிவிட்டு பரிசளிக்க நினைத்துள்ளார்.

அதன்படி குழந்தைக்கு பல் முளைத்தல், முடி வளர்தல் என குழந்தையின் ஒவ்வொரு படிநிலைகளிலும் புகைப்படங்கள் எடுத்துள்ளார் ஹென்ரிக்.

இந்தநிலையில் அலிடா வளர்ந்து 20 வருடங்கள் ஆன நிலையில் தன் மகளின் புகைப்படங்களை இணைத்து ஒரு வீடியோவாக உருவாக்கியுள்ளார்.

2 நிமிடங்கள் கால அளவு கொண்ட இந்த வீடியோ பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அனைத்து புகைப்படங்களும் ஒரே பேக்ரௌண்ட்டை தந்தை பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular