தெறி, மெர்சல் ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘தளபதி 63’ படத்திற்காக இணைந்துள்ளது அட்லி-விஜய் கூட்டணி. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 63 படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தில் பிரபல பேச்சாளர் பேராசிரியர் ஞானசம்பந்தன் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் இன்னும் பலர் நடிக்கிறார்கள். மேலும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் கால் பந்து விளையாட்டுப் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். கடந்த ஜனவரி மாதம் முதல் சென்னையின் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்தப் படம் திரைக்கு வரும் என்றும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் பிரபல பேச்சாளர் பேராசிரியர் ஞானசம்பந்தன் நடிப்பதாகத் தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து இவர் நயன்தாராவின் அப்பாவாக நடிக்கிறார் என்கிற தகவல் உறுதியாகியுள்ளது.