fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
செய்திகள்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மக்கள் அதிர்ச்சி

இந்தோனேசியாவானது பல தீவுக் கூட்டங்களை கொண்டது.  இந்தோனேசியா நாட்டின் வடமேற்கில் உள்ள பென்டோலோ என்னும் நகரில் இன்று அதிகாலை 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு பின் சுலவேசி தீவில் உள்ள பிட்டுங் நகரில் அடுத்ததாக 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அடுத்தடுத்து தொடர்ந்து ஏற்பட்ட  நிலநடுக்கங்களால் மக்கள் பீதியடைந்த நிலையில் அதை அடுத்து  நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வடக்கு மலுக்கு பகுதியில் இன்று பிற்பகல் 6.3 ரிக்டர் அளவில் மூன்றாவதாக  மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மக்கள் அதிர்ச்சி

இந்த நிலநடுக்கங்களினால் அப்பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் எல்லாம் பயங்கரமாக குலுங்கின. சில வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.  வீடுகளில் இருந்து ஓட்டம்பிடித்து வெளியேறிய மக்கள் சாலைகள் மற்றும் திறந்த வெளிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

Related posts

யாழ். வந்தார் புதிய இராணுவத் தளபதி! (Photo)

TamilTwin

கொரோனாவை எதிர்கொள்ள எல்லா நிலையிலும் தயாராக இருக்கிறோம்

World News

யாழ்.மாநகர சபையில் சிறப்புற்ற பொங்கல் விழா (Photos)

TamilTwin