இங்கிலாந்தின் மேற்கு யாச்சியில் உள்ள விம்சியைச் சார்ந்த ஹேம்னா ஹோல் என்ற 27 வயது பெண்மணி கர்ப்பமாக இருந்துள்ளார்.
அவர் கர்ப்பமாக இருக்கும்போது ஏற்பட்ட சில மருத்துவச் சிக்கல்களால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
20 வாரம் கர்ப்பமாக இருந்த ஹேம்னாவை மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்துள்ளனர். மேலும் மருத்துவர்கள் குழந்தையின் இதயத் துடிப்பை உணர முடியவில்லை என்றும் குழந்தை வயிற்றில் இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
ஆனால் ஹேம்னா குழந்தை இறக்கவில்லை என்று நம்பியுள்ளார். மேலும் குழந்தையினை கடைசியாக ஒருமுறை ஸ்கேன் செய்து பார்க்கக் கோரி மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் கடைசியாக ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அப்போது ஸ்கேனில் குழந்தையின் இதயத் துடிப்பானது சீராகவே இருந்துள்ளது கண்டு மருத்துவர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் ஹேம்னாவிடம் மன்னிப்புக் கேட்டுள்ளனர். அதன்பின் 36 வாரங்களில் ஹேம்னாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.