fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » பல நாட்களாக கேட்பாரற்ற நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம்!
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

பல நாட்களாக கேட்பாரற்ற நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம்!

பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவரின் சடலம் 18 நாட்களாக வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 29ஆம் திகதி 71 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது சடலமே இவ்வாறு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி பாணந்துறை பிரதேசத்தில் வாகன விபத்துக்குள்ளாகியுள்ளார்.

கடந்த 5 மாத காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த மாதம் 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது சடலத்திற்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பில் குடும்ப உறுப்பினர்களிடம் அறிவித்த போதிலும் இதுவரையில் ஒருவரும் வருகை தரவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமையினால் வைத்தியசாலை ஊழியர்கள் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பல்வேறு பாரம்பரிய சடங்குகளுடன் மசூதியில் நடந்த இந்து திருமணம்!

World News

பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணிக்கு காரணம்!

SL News

24 மணிநேரத்தில் யாழில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

SL News