திகில் திரைப்படங்களை பார்ப்பதற்கு 95 ஆயிரம் ரூபாய் பரிசு அறிவித்த நிறுவனம்

அக்டோபரில் 10 நாட்களில் 13 திகில் திரைப்படங்களைப் பார்ப்பவர்களுக்கு அமெரிக்க நிதி நிறுவனமான ஃபின்ஸ்பஸ் ரூ .95,000 பரிசாக அறிவித்துள்ளது. அதிக பட்ஜெட்டில் எடுக்கக்கூடிய அனைத்து திகில் திரைப்படங்களும் பார்வையாளர்களை அதிகம் பாதிக்கிறதா? அல்லது குறைந்த பட்ஜெட் திரைப்படம் தாக்கத்தை ஏற்படுத்துமா? கண்டுபிடிக்க இந்த ஆய்வை நடத்துவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் நபருக்கு அவரின் இதயத்துடிப்பைக் கண்காணிக்கும் விதமாக பிட்பிட்டை பயன்படுத்தப்படும். அதன் மூலமாக அவரின் இதயத் துடிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும். போட்டியாளர் 10 நாட்களில் 13 திகில் படங்களை பார்ப்பார்கள் என்று தெரிவித்துள்ளது. இந்தப் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த 18வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

இதில் ஆர்வமுள்ளவர்கள் படிவம் ஒன்றை பூர்த்தி செய்து, இந்தப் போட்டிக்கு தகுதியானவர் என்பதையும் குறிப்பிட வேண்டும். செப்டம்பர் 26ம் தேதிக்குள் இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இதையடுத்து போட்டியாளர்கள் பார்க்கக்கூடிய 13 திகில் படங்களின் பெயர்களையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. Saw, Amityville Horror, A Quiet Place, A Quiet Place Part 2, Candyman, Insidious. The Blair Witch Project. Sinister, Get Out, The Purge, Halloween (2018), Paranormal Activity, Annabelle இவைதான் அந்த படங்கள்