fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

கிளிநொச்சி வயோதிபரின் கொரோனாத் தொற்றுக்கு காரணம்

கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட வயோதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு குடிநீர் போத்தல்கள் விநியோகத்தில் ஈடுபடும் பணியாளர்கள் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகக் காணப்படும் மேல் மாகாணத்துக்குச் சென்று குடிநீர் போத்தல்களை எடுத்து வந்து கிளிநொச்சி மாவட்டத்தில் விநியோகிக்கும் முகவர் நிறுவனத்தைச் சேர்ந்தோருக்கு பி.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுக்க சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தற்போது தென்னிலங்கையில் இருக்கும் முகவர் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களை கிளிநொச்சிக்குத் திரும்புமாறு சுகாதாரத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களை தனிமைப்படுத்தி பி.சி.ஆர் பரிசோதனை நடத்தவும் சுகாதாரத் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த “கிளிநொச்சி 55ஆம் கட்டையில் உள்ள ஒயில் கடையில் பணியாற்றும் முதியவர் ஒருவர் காய்ச்சல் என்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கோரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அவருக்கு கோரோனா தொற்று உள்ளமை பி.சி.ஆர் பரிசோதனையில் கடந்த திங்கட்கிழமை மாலை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது கடையில் பாரவூர்திகள் மற்றும் டிப்பர் வாகனங்களின் சாரதிகள், உதவியாளர்கள் ஒயில் வாங்குவதற்கு வந்து செல்கின்றனர். அவர்களில் ஒருவரால் வயோதிபருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இந்நிலையில் குடிநீர் போத்தல்களை மேல் மாகாணத்திலிருந்து எடுத்து வந்து கிளிநொச்சியில் விநியோகிக்கும் அந்த மாவட்டத்தில் வசிக்கும் இருவர் தொடர்பில் சுகாதாரத் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் முதியவரின் கடைக்கு வந்து செல்வதால் அவர்களை தனிமைப்படுத்தி பி.சி.ஆர் பரிசோதனையை நடத்த சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

மன்னாரில் தமிழுக்கு முன்னுரிமை பெயர்ப்பலகை விமலின் உத்தரவால் மாற்றப்பட்டது

World News

பட்ஜெட் விசேட அமர்வு நேரமாற்றத்தால் நல்லூர் பிரதேச சபையில் சர்ச்சை (Video)

N N

ராஜீவ்காந்தி கொலை வழக்கு ; 7 பேர் விடுதலையில் முடிவு எடுக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது

World News