Friday, February 3, 2023
HomeNews and Viewsஇந்தியச் செய்திகள்விலைகுறைந்த உடையை அணியமாட்டேன்.. திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..!

விலைகுறைந்த உடையை அணியமாட்டேன்.. திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..!

உத்தரகாண்டில் திருமணத்துக்கு அதிக விலையில் உடை வாங்காததால் மணப் பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் அருகே உள்ள ஹல்த்வானி பகுதியைச் சார்ந்தவர் ஹமீலா.

இவருக்கும் அப்பகுதியைச் சார்ந்த பகீர் என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் பெற்றோர் சம்மதத்துடன் செய்யப்பட்டு வந்தது.

திருமணத்திற்கான பத்திரிக்கைகள் வைத்து உறவினர்களையும் அழைத்துவிட்டனர்.

இந்தநிலையில் உற்றார் உறவினர்கள் திருமணத்துக்கு வந்திருந்தநிலையில் மணப்பெண்ணுக்கு வாங்கிய உடையோடு மணமகன் வீட்டாரும் திருமண மண்டபம் வந்தடைந்தனர்.

திருமண மண்டபத்தில் மணமகன் வீட்டார் வாங்கிவந்த லெஹங்கா உடையினைப் பார்த்த பெண் கடுப்பாகியுள்ளார்.

அதாவது அந்த லெஹங்காவின் விலை ரூ.10000 தானா? இவ்வளவு மலிவான உடையினை நான் அணிய மாட்டேன் என்று கோபமாகக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மணமகளின் தந்தை அவரின் பெண்ணுக்குப் பிடித்ததுபோல் லெஹங்கா வாங்க அவருடைய ஏ.டி.எம் கார்டைக் கொடுத்துள்ளார்.

ஆனால் மணப்பெண் தந்தையிடம் ஏ.டி.எம் கார்டை வாங்க மறுத்தநிலையில் இந்த விவகாரம் போலீசாரிடம் சென்றது.

போலீசார் விசாரித்தபோது இவ்வளவு மலிவான உடையினை அணியமாட்டேன் என்று கூறி மணப்பெண் திட்டவட்டமாக இருக்க இறுதியில் திருமணம் நிறுத்தப்பட்டுவிட்டது.

RELATED ARTICLES

Most Popular