யாழ்.தாவடியில் மரவள்ளிச் செய்கையில் விவசாயிகள் ஆர்வம்(Photos)

யாழ்.தாவடி வடக்குப் பகுதியில் தற்போது விவசாயிகள் மரவள்ளி விவசாயச் செய்கையில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நாட்டில் தற்போது நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்வரும் காலங்களில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் இவ்வாறு மரவள்ளி விவசாயச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், விவசாயிகள் மரவள்ளிச் செய்கைக்கு நீர் பாய்ச்சுவதற்கான மண்ணெண்ணெய்யைப் பெற்றுக் கொள்வதில் இடர்பாடுகளை எதிர்கொண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)