fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » குரல் கொடுத்த அத்தனை பேருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி- மணிவண்ணன்
இலங்கைச் செய்திகள் செய்திகள்

குரல் கொடுத்த அத்தனை பேருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி- மணிவண்ணன்

யாழ்ப்பாணம் மாநகரைத் துாய்மையாக வைத்திருப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு தவறான வியாக்கியானம் செய்து பொலிஸார் கைது செய்தபோது தனக்காகக் குரல் கொடுத்த அத்தனை பேருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி கூறுவதாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

மக்கள், உள்நாட்டு, பன்னாட்டு அரசியல் தலைவா்கள், சட்டத்தரணிகள், துாதுவராலயங்கள், ஊடகங்கள், புலம்பெயர் உறவுகள், நண்பர்கள், ஆதரவாளர்கள் என அனைவருக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.

அத்துடன் ‘துாய்மையான நகரம் தூய்மையான கரங்கள்’ என நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக நடந்துகொள்வதே யாழ்.மாநகர மக்களுக்கான தனது பணியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பணியை செம்மையாகவும், முன்மாதிரியாகவும் செய்வதற்கு எடுத்த முயற்சியை மிகத் தவறாக வியாக்கியானம் செய்து தன்னை கைதுசெய்தார்கள் எனச் சுட்டிக் காட்டியுள்ள மணிவண்ணன் தன்னுடைய பயணம் மிக நேர்மையானது எனவும், வெளிப்படையானது என்பதுடன் மக்களுக்கானது எனவும் கூறியுள்ளார்.

மேலும், பாதை எப்படியானது என்பதைப் புரிந்து கொண்டே பயணத்தை ஆரம்பித்ததாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் தன்னுடைய பயணம் நின்றுவிடாது எனவும் மணிவண்ணன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஊரடங்கு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் புதிய அறிவிப்பு

World News

அம்மா எங்கே? விமான தாக்குதல் இடர்பாடுகளுக்குள் கிக்கி கதறும் சிறுமி! கண்கலங்க வைக்கும் வீடியோ (video)

World News

யாழ். சுன்னாகம் பொதுநூலகத்தில் ஆரம்பமானது அரிய ஓவியங்கள், சிற்பங்களின் கண்காட்சி (Video, Photos)

TamilTwin