fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Events-நிகழ்வுகள் இலங்கைச் செய்திகள் செய்திகள்

யாழ். குப்பிழானில் நாளை தைப்பொங்கல் விழா

குப்பிழான் விக்னேஸ்வரா சனசமூக நிலையம் நடாத்தும் தைப்பொங்கல் விழா தைப்பொங்கல் திருநாளான நாளை புதன்கிழமை(15) பிற்பகல் மேற்படி சனசமூக நிலையத்தில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

பிற்பகல்-02 மணியளவில் சனசமூக நிலைய முன்றலில் பொங்கல் நிகழ்வுகள் ஆரம்பமாகி நிறைவுபெற்றதைத் தொடர்ந்து பிற்பகல்-03.30 மணி முதல் குப்பிழான் விக்னேஸ்வரா சனசமூக நிலைய மண்டபத்தில் நிலையத் தலைவர் பொ. விஜே தலைமையில் பொங்கல் விழா நிகழ்வுகள் ஆரம்பமாகும்.

இந்த விழாவில் குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலய அதிபர் இரா. ஜெயக்குமார் முதன்மை விருந்தினராகவும், மூத்த இசைச் சொற்பொழிவாளரும், ஓய்வுநிலை அதிபருமான கவிமணி க. ஆனந்தராசா (அன்னைதாஸன்), பிரபல அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம், குப்பிழான் வடக்கு கிராம சேவையாளர் அ. அகிலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

விழாவில் கிராமத்தைச் சேர்ந்த சான்றோர்கள் கெளரவம் இடம்பெறவுள்ளதுடன் தைப்பொங்கலை முன்னிட்டு சிறப்புப் பேச்சு, இசையரங்கு, நடனம், கவிதை, பாட்டு உள்ளிட்ட கலைநிகழ்வுகளும் நடைபெறும்.

{செய்தித் தொகுப்பு:- எஸ்.ரவி}

Related posts

கொரோனா வைரஸ் தாக்கம்: பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

World News

வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

World News

தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவத்தினர்: விளக்கிய மஹிந்த தேசப்பிரிய

World News