கடல்வழித் தாக்குதல் தீவிரவாதிகள் நடத்தலாம் என இந்தியக் கடற்படைத்தளபதி சுனில் லன்பா எச்சரிக்கை அளித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்தியா- பசுபிக் மாநாட்டில் இந்திய கடற்படைத்தளபதி சுனில் லன்பா உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, உலக நாடுகள் பயங்கரவாதத்தை அளிக்க வேண்டும் என்றும், கடல் வழிப் பயணத்தை பாதுகாப்பாக மாற்றவேண்டும் என்றார். சில சமயங்களில் தீவிரவாதிகள் மீனவர்களின் படகுகளின் மூலம் கடல்வழிப் பயணம் மேற்கொண்டுள்ளனர், மேலும் சில சமயங்களில் மீனவர்களின் துணையுடன் கடல்வழிப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாகத்தான் அனைத்து நாடுகளும் தங்கள் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டியுள்ளது. மேலும் இதற்காக உலக நாடுகள் தங்கள் கடல்வழிப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் மற்றும் தீவிரமான கவனம் செலுத்துதல் வேண்டும்.
மேலும் அவர் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை பயங்கரவாத தாக்குதல் போன்று கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதையும் கூறினார்.
கடல்வழித் தாக்குதல் நடத்துவதற்கும் மற்ற பல்வேறு வழிகளில் தாக்குதல் நடத்துவதற்கும் தீவிரவாதிகள் பயிற்சி எடுத்துவருகின்றனர், மற்றும் பல்வேறு தாக்குதல் திட்டங்களோடு இருக்கின்றனர் என எச்சரித்தார் இந்தியக் கடற்படைத்தளபதி சுனில் லன்பா.