பனையூரில் பதற்றம்.. கருணாஸ் கட்சியினரின் மோசமான செயல்..!

முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகி திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து கூட்டமாக மது அருந்திய குடிகார கூட்டம், வாலிபரை அடித்து ரகளை செய்து இறுதியில் கலவரமாக மாறி, பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள இ.சி.ஆர் சாலையில் இருக்கும் பனையூரில் நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை சார்ந்த கட்சி நிர்வாகியின் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த வரவேற்புக்கு முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை சார்ந்தவர்கள் வந்துள்ளனர்.

இந்த நிலையில், அந்த கும்பல் மண்டபம் அருகே தெருவில் கூட்டமாக அமர்ந்து மது அருந்தியது. வேறு வேலைக்கு சென்று கொண்டிருந்த கவின், தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது வாகனம் செல்ல வழிவிடக்கூறி ஹாரன் அடித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குடிகார கும்பல், மதுபோதையில் கவினை தாக்கியுள்ளது. கவின் பனையூர் கிராமத்தில் இருக்கும் தனது சொந்தக்காரர்களிடம் விஷயத்தை கூறி ஊரை அழைத்து வந்த நிலையில், சம்பவ இடத்தில் உருட்டுக்கட்டை உட்பட ஆயுதத்துடன் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை சார்ந்த 50 பேர் இருந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் பொதுமக்களை தாக்கி விரட்டியடித்து இருக்கின்றனர். இதனால் பலரும் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் பரபரப்பு சூழ்நிலை நிலவி வருவதால், பொலிஸார் 100 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.