fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

கருணைக் கிழங்கு மசியல்

நாக்கில் அரித்தாலும் குடலை சுத்தப்படுத்துவதற்கு கருணைக்கிழங்கு உதவுகிறது. உடல் எடையை குறைக்க கருணைக்கிழங்கு சாப்பிடலாம். நோய்களில் குறிப்பாக மூலநோயை குணப்படுவதில் சிறந்தது.  விட்டமின் சி, விட்டமின் பி, மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம், இரும்பு, போன்ற சத்துக்கள் உள்ளன. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் மாதவிடாய் ஏற்படுவதில் பிரச்சனை போன்றவை சீராகும்.

கருணைக் கிழங்கு மசியல்

கருணைக் கிழங்கு மசியல் - Tender Berries Maciyal

கருணைக் கிழங்கு மசியல் கருணைக் கிழங்கு மசியல் Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 grams fat
Rating: 5.0/5
( 2 voted )

Ingredients

  • பிடி கருணைக் கிழங்கு - 200 கிராம்
  • புளி - எலுமிச்சை அளவு
  • பச்சை மிளகாய் - 5
  • சாம்பார் வெங்காயம் - 50 கிராம்
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
  • பெருங்காயத்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
  • கடுகு - தாளிக்க
  • கறிவேப்பிலை, வெல்லம் - சிறிதளவு

Instructions

முதலில் கருணைக்கிழங்கை அவித்துத் தோல் உரித்து மசித்து வைத்துக் கொள்ளவும். பின் புளியைக் கரைத்து கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, சிறிது பெருங்காயத் தூள் பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம்  வதங்கியதும் புளித் தண்ணீரை ஊற்றி வேகவிடுங்கள்.  பின் மசித்த கிழங்கைப் போட்டு சிறிது நேரம் கழித்து வெல்லம் போட்டுக் கிளறி இறக்க வேண்டும். சாம்பார் சாதத்துடன் தொட்டுச் சாப்பிடச் சுவையாக இருக்கும். சூப்பரான கருணைக் கிழங்கு மசியல் ரெடி.

கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் எலும்புகள் பலவீனம் நீங்கி ஆற்றலை அதிகரிக்கிறது. கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம், ரத்த மூலம், முளை மூலம் ஆகியன குணப்படுகின்றன. மேலும் கருணைக்கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.

ஒருமாதம் வரை வேறு உணவு ஒன்றையும் சாப்பிடாமல் கருணைக் கிழங்கை மட்டும் வேக வைத்து அப்படியே உணவாக சாப்பிடவும், நாக்கில் ஏற்படும் வறட்சி மாற மோர் மட்டுமே சாப்பிட்டு வர மூலம் பூரணமாகக் குணமாகிவிடும். உணவில் பெருமளவில் கருணைக் கிழங்கை புட்டவியலாக வேக வைத்து, எண்ணெய்யும் உப்பும் மட்டும் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வருவது நல்லது.

Related posts

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெண் பூசணி தயிர் சாதம்

N N

சத்தான காய்கறி சூப்

N N

டேஸ்ட்டியான வேர்க்கடலை உருண்டை!!

N N