fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
10 இடங்களில் வெயில் சதம்
இந்தியச் செய்திகள்

10 இடங்களில் வெயில் சதம்

இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் இந்நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் நேற்று வெப்பநிலை சதமடித்தது.

     இந்த ஆண்டு மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. வியாழக்கிழமை 10 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக சேலம், திருத்தணியில் தலா 105 டிகிரி வெப்பநிலை பதிவானது. வேலூரில் 104 டிகிரியும். கோவை விமான நிலையம், தருமபுரி, கரூர்பரமத்தியில் தலா 103 டிகிரியும், நாமக்கலில் 102 டிகிரியும் , சென்னை மீனம்பாக்கம், திருச்சி, மதுரை விமான நிலையங்களில் தலா 101 டிகிரியும் பதிவானது.

     இந்நிலையைக் குறித்து சென்னை ஆய்வு மைய அதிகாரி கூறியது, “சூரியன் பூமத்திய ரேகையைக் கடந்து, வடக்கு அட்சரேகையை நோக்கி நகர்வதால் வெப்பநிலை பல இடங்களில் உயர்ந்துள்ளது என்றும் தமிழகம் புதுச்சேரியில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்றும், தமிழகத்தில் சில இடங்களில் வழக்கத்தைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது, முக்கியமாக குறிப்பிட்ட இந்த 10 மாவட்டங்களில் வழக்கத்தைவிட வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது” என்றும் கூறினார்.

Related posts

வைகோ குற்றவாளி: வெளியானது தீர்ப்பு!!

TamilTwin

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு!- தயாராகிறது திகார் சிறை

World News

டிசம்பர் 2ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை

World News