தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ரெஜினா. இவர் கேடி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா , சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் நடிகை ரெஜினா. தற்போது தமிழை விட தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு நடிகை ரெஜினா ‘பில்லா நுவ்வு லேனி ஜீவிதம்’ என்னும் படத்தில் சாய் தரம் தேஜுடன் இணைந்து நடித்தார். இது ஒரு காதல் படம் ஆகும். இப்படத்தில் இருவருக்கும் ஏராளமான காதல் காட்சிகள் உள்ளன. திரையில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் காட்சிகள் இயல்பாக வந்ததால் இருவரும் நிஜமாகவே காதலிப்பதால் தான் அப்படி நடிக்க முடிந்தது என்ற ஒரு பேச்சு எழுந்தது. அந்த படத்தில் இணைந்து நடித்தது முதல் இருவரும் நண்பர்களாக பழகி வருகின்றனர். அவர்களின் நடிப்பு தற்போது காதலாக மலர்ந்திருப்பதாக திரையுலகினர் மத்தியில் கிசுகிசு நிலவுகிறது.
இதுபற்றி நடிகர் சாய் தரம் தேஜா கூறுகையில், ‘‘நானும் ரெஜினாவும் ஒரு நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எங்களுக்குள் வேற எதுவும் இல்லை” என்று சொன்னார். இதேபோல் தான் நடிகை ரெஜினாவின் பதிலும் இருந்தது.