பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்சமயம் எழில் இயக்கும் காமெடி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஈஷா ரெபா நடிக்கிறார்.
சர்வம் தாளமயம் திரைப்படத்தை தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷ் குப்பத்து ராஜா, ஜெயில், ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். பல படங்களுக்கு ஒப்பந்தமாகியும் வருகிறார். துள்ளாத மனமும் துள்ளும் படத்தை இயக்கிய இயக்குநர் எழில் இயக்கும் படம் ஒன்றில் ஜி.வி நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. அதன் படி இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. பல மொழிகளில் திரைப்படங்கள் தயாரித்து வரும் ரமேஷ் பி.பிள்ளை வழங்கும் அபிஷேக் ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

ஏற்கனவே இயக்குநர் சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் – சித்தார்த் நடிக்கும் திரைப்படத்தை இந்நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து எழில் இயக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஈஷா ரெபா நடிக்கிறார். சி.சத்யா இசையமைக்கும் இப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் காமெடி படமாக உருவாகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.