fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

தனுஷ் படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர்

னுஷ் படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர்

     தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் தனுஷ். செல்வராகவன் இயக்கத்தில் உருவான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இப்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

      இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ், சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தை ‘கொடி’ பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாகச் சினேகா நடிக்கிறார். இதில் தனுஷ் தந்தை, மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இன்னும் பெயரிடாத இப்படத்தில் வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related posts

ரசிகர்களுக்கு கண்டனம் தெரிவித்த வித்யா பாலன் !!

N N

ரஜினியின் பேட்ட சாதனையை முறியடித்த சூர்யாவின் காப்பான்

N N

அடுத்தப்படத்தில் சமந்தாவுடன் இணையும் நடிகர் பிராசாந்த் !

TamilTwin India