Tuesday, September 27, 2022
Homeஆன்மிகம்நிறைவு ஆடிச் செவ்வாய் நாளில் முத்துச் சப்பரத்தில் துர்க்கை அம்பாள் எழில் காட்சி(Photos)

நிறைவு ஆடிச் செவ்வாய் நாளில் முத்துச் சப்பரத்தில் துர்க்கை அம்பாள் எழில் காட்சி(Photos)

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய நிறைவு ஆடிச் செவ்வாய் உற்சவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (16.8.2022) சிறப்பாக இடம்பெற்றது.

நேற்று முன்தினம் மாலை பூசை வழிபாடுகள், வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து துர்க்கை அம்பாள் அலங்கார சொரூபிணியாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்துச் சப்பரத்தில் வெளி வீதி உலா வந்து அருள்பாலித்தாள்.

இதேவேளை, பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் மேற்படி உற்சவத்தில் பக்திபூர்வமாக கலந்து கொண்டனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular