Friday, February 3, 2023
Homeஆன்மிகம்தெல்லிப்பழை கோணாசீமா நரசிங்க வைரவருக்குப் பாலஸ்தாபன கும்பாபிஷேகம்

தெல்லிப்பழை கோணாசீமா நரசிங்க வைரவருக்குப் பாலஸ்தாபன கும்பாபிஷேகம்

யாழ்.தெல்லிப்பழை மகாதனை கோணாசீமா ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நாளை மறுதினம் திங்கட்கிழமை(05.12.2022) காலை-09.21 மணி முதல் முற்பகல்-10.46 மணி வரையான சுபமுகூர்த்த வேளையில் இடம்பெற உள்ளது.

இவ்வாலயப் பாலஸ்தாபன கும்பாபிஷேகத்திற்கான கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (04.12.2022) காலை-07.15 மணிக்கு கணபதி பூசையுடன் ஆரம்பமாகும்.

இதேவேளை, மேற்படி ஆலயத்தில் பல்வேறு திருப்பணி வேலைகள் நிறைவேற்ற வேண்டியிருப்பதை முன்னிட்டே பாலஸ்தாபன கும்பாபிஷேகம் இடம்பெறுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular