Thursday, December 1, 2022
HomeTamilவிளையாட்டுதேசிய உதைபந்தாட்டப் போட்டி: யாழ்.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி பெண்கள் அணி சம்பியன்

தேசிய உதைபந்தாட்டப் போட்டி: யாழ்.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி பெண்கள் அணி சம்பியன்

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற 17 வயதுப் பெண்களுக்கான தேசிய உதைபந்தாட்டப் போட்டியில் யாழ்.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி சம்பியனாகி கல்லூரிச் சமூகத்திற்கும், மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளது.

17 வயதுப் பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று வியாழக்கிழமை(24.11.2022) கொழும்பு களனிப் பிரதேச சபை மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் பொலனறுவை பன்டிவெவ மகாவித்தியாலயத்துடன் யாழ்.தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணி மோதியது. இந் நிலையில் மேற்படி கல்லூரியின் அணித் தலைவி லயன்சிகா முதல்பாதி ஆட்ட நேரத்தில் இரண்டு கோல்களைப் பெற்றுக் கொடுத்த நிலையில் 2: 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி யாழ்.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி சம்பியனாகியது.

பிரதமப் பயிற்றுநர் சி.சாந்தகுமார்(சாந்தன்), உதவிப் பயிற்றுநர் செல்வி.இலக்சனா ஆகியோரின் சிறப்பான பயிற்றுவிப்பாலும், நெறிப்படுத்தலாலும் குறித்த வெற்றியைப் பெற முடிந்துள்ளது.

இதேவேளை, மேற்படி இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிச் சம்பியனாகிப் பெருமை சேர்த்த யாழ்.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பெண்கள் உதைபந்தாட்ட அணியைச் சேர்ந்த மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular