அதிக புரதச் சத்துகளைக் கொண்ட சீஸில் நாம் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் வகையிலான ஸ்நாக்ஸ் ரெசிப்பி ஒன்றினை இப்போது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானவை:
பிரட் – 4
சீஸ் – ½ கப்
கான்பிளவர் மாவு – 3 ஸ்பூன்
பிரட் தூள் – 1/2 கப்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. பிரட்டினை சிறிய சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.
2. அடுத்து அதன்மீது சீஸைத் துருவி தூவி, அதன் மேல் பிரட் வைக்கவும்.
3. அடுத்து பதமாக நீர் சேர்த்து கான்பிளவர் மாவை கலக்கவும்.
4. பிரட் துண்டை கான்பிளவர் மாவில் நனைத்து பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் பொரிக்கவும்.
5. எண்ணெயில் பொரித்து எடுத்தால் பிரட் சீஸ் பைட்ஸ் ரெடி.