fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

இனவெறி அவமரியாதையை அமெரிக்காவில் சந்தித்த தனிஷா முகர்ஜி

                தனிஷா முகர்ஜி இவர் தமிழில் உன்னாலே உன்னாலே படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.  இவர் இந்தி நடிகை கஜோலின் தங்கை ஆவார்.  இவர் பல்வேறு டி.வி நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் இவருக்கு அமெரிக்காவில் இனவெறி அவமரியாதை நடந்து உள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார்.  இது குறித்து அவர் கூறி இருந்ததாவது, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்று இருந்தேன்.  நிகழ்ச்சி முடிவடைந்து நான் ஹோட்டலுக்கு சென்ற பொழுது அங்கு இருந்தவர் என்னை அருவருப்பாக பார்த்து கேவலமாக பேசினார்.  அவர் மிகவும் குருரமாகவும் முரட்டுத்தனமாகவும் நடந்து கொண்டார்.

இனவெறி அவமரியாதையை அமெரிக்காவில் சந்தித்த தனிஷா முகர்ஜி

       என் உடன் வந்த தோழிகளுக்கும் இச்செயல் மிகுந்த அதிர்ச்சியினை அளித்தது.  அவர் நடந்து கொண்ட விதம் எனக்கு அருவருப்பாக இருந்தது.  நான் பொறுமையாகத்தான் இருந்தேன்.  அவர் என்னிடம் இன வெறியோடு நடந்து கொண்டார்.  அங்கு உள்ள ஹோட்டல் ஊழியர் ஒருவர் நீங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக தெரிவதால் இவ்வாறு அவர் நடந்து கொண்டு உள்ளார் என கூறினார் இவ்வாறு தனிஷா முகர்ஜி கூறி உள்ளார்.

Related posts

தொடங்குகிறது ”பிக்பாஸ் சீசன் 4” வெளியானது சூப்பர் தகவல் !

TamilTwin India

இருட்டு படத்தின் வெற்றியை கொண்டாடும் சுந்தர் சி

TamilTwin India

பாக்ஸ் ஆஃபீஸில் வெளுத்துவாங்கும் ராஷ்மிகா மந்தனா படம்!

TamilTwin India