மு.க.ஸ்டாலின் தலைமையில் இலங்கை மக்களுக்கு நிவாரணம் பொருட்கள் அனுப்பும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே பொருளாதார நெருக்கடியானது நிலவி வருகின்றது, பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களையும் வாங்க முடியாமல் திணறி வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடி கழுத்தை நெரிக்க பொதுமக்கள் இலங்கை பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கினர்.
தான் எடுத்த தவறான முடிவினை ஒத்துக் கொண்ட ராஜ பக்சே பதவி விலகுவதாக அறிவித்தார்.
இலங்கையின் மோசமான நிலைமையினைச் சமாளிக்க இந்தியா ஏற்கனவே 3700 கோடி கடன் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் இலங்கை மக்களுக்கு உதவ எண்ணி தமிழக முதல்வர் ஸ்டாலின் 40 டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் மருந்துகளை வழங்கியுள்ளார்.
தற்போது இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
நிவாரணப் பொருட்கள் சாக்குப் பையில் போடப்பட்டு, சாக்கு முட்டையில் தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன் என்று அச்சிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் பொருட்கள் மூன்று கட்டமாக அனுப்பப்பட உள்ளது, முதல் கட்டமாக திங்கள் கிழமை அனுப்பப்பட உள்ளது.
நம் ஈழத்து மக்களின் துயர் துடைக்க மு.க.ஸ்டாலின் உடனடியாக எடுத்த முடிவுகள் மக்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றுள்ளது.