தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழு நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஏகமனதாக கூடி தீர்மானமொன்றை எடுத்துள்ளது. இதன்படி, யாழ்.மாநகர சபையின் முதன்மை வேட்பாளராகப் பிரபல தொழிற்சங்கவாதி ஆ.தீபன் திலீசனும், மாநகரசபையின் துணை முதல்வர் வேட்பாளராகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினரான வை.கிருபாகரனும் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவார்கள் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை(25.01.2023) முற்பகல்-11.30 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்ட உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், மற்றும் யாழ்.மாநகரசபையின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட உள்ள தீபன் திலீசன் மற்றும் துணை முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட உள்ள வை.கிருபாகரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)