fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

தமிழகம்: சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!!

பொதுவாக இந்தியாவில் அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான கால கட்டங்களில் மழையானது பெய்யும். இந்த கால கட்டத்தில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டும் இடமாக சென்னை விளங்கும்.

இந்த மழையானது தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளாவினையும் தாக்குவதாக உள்ளது, அதாவது தென் வடகிழக்கு பருவ மழையாகப் பெய்யத் துவங்கும் இந்த மழையானது தற்போது அக்டோபர் இறுதியில் தலைகாட்டத் துவங்கியுள்ளது.

நேற்று லேசான மழையாகத் துவங்கிய நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை மற்றும் கேரளாவின் சில முக்கிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியுள்ளது.

தமிழகம்: சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!!

தமிழகத்தினைப் பொறுத்தவரையில் இன்று சென்னையைப் பொறுத்தவரையில் நெல்லை, விருதுநகர், தென்காசி போன்ற இடங்களிலும் மழை பெய்து வருகின்றது.

தமிழக வானிலை மைய அறிக்கையின்படி சென்னையில் நேற்று இரவு துவங்கிய மழையானது பகல் வரை கனமழையாக வெளுத்து வாங்கியுள்ளது.

இதனால் வேலைக்குச் செல்லும் பணியாளர்கள் மற்றும் வியாபாரிகள் எனப் பலரும் இந்த கன மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

மேலும் இந்த மழையானது இன்னும் 3 நாட்கள் வரை கனமழையாகப் பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழகத்தில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் லேசானது முதல் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Related posts

வறுமையால் படிக்க பணமில்லை!- நட்புக்காக தற்கொலைக்கு முயன்ற நண்பன்

World News

திமுகவை கண்டித்து நாளை பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் – பொன்.ராதாகிருஷ்ணன்

World News

ப.சிதம்பரம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

World News