Tuesday, September 27, 2022
HomeNews and Viewsஇந்தியச் செய்திகள்அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தைத் துவக்கி வைத்த தமிழக முதலமைச்சர்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தைத் துவக்கி வைத்த தமிழக முதலமைச்சர்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம், சீருடை, இலவசக் கல்வி என அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் குழந்தைகள் சத்தான உணவினைச் சாப்பிட வேண்டும் என்ற நோக்கில் சத்துணவுத் திட்டமானது நடைமுறையில் உள்ளது.

அதன்படி குழந்தைகள் மதியம் சாப்பாடு, சாம்பார், முட்டை, பச்சைப் பயறு, கொண்டைக் கடலை எனப் பலவும் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் குழந்தைகள் காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதைத் தடுக்கும் பொருட்டு காலை உணவு வழங்கும் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது தமிழக அரசு.

அதன்படி இந்தத் திட்டத்தினை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் துவங்கி வைத்துள்ளார்.

மதுரையில் உள்ள நெல்பேட்டை அண்ணா சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து காலை உணவு திட்டத்தை மதுரையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் துவங்கி வைத்தார் முதலமைச்சர்.

அதன்பின்னர் மாணவர்களுக்கு காலை உணவினை தன் கையால் பரிமாறியதுடன் ஊட்டிவிடவும் செய்தார்.

மாணவர்கள் காலை உணவை மிகவும் ஆர்வத்துடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

RELATED ARTICLES

Most Popular