fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
வாழ்க்கை

டேட்டிங் : 50 வயது ஆகிவிட்டது என்று நினைக்காமல் நீங்களும் டேட்டிங் செய்யலாம்!

டேட்டிங் என்றால் குறிப்பிட்ட ஒருவரை சந்தித்து அவருடன் பேசி மகிழுந்து நேரம் கழிப்பதாகும். அவரை குறிப்பிட்ட சில காரணத்தினால் சந்திக்கலாம் அல்லது திட்டமிட்டு அடிக்கடி சந்தித்து கொ ள்ளலாம்.

Tamil Dating even fi you are in 50's

டேட்டிங் மற்றும் உறவுமுறைக்கும் உள்ள வித்யாசம் :

டேட்டிங் என்றால் இருவர் எந்த காரணமும் இல்லாமல் மகிழ்ந்து நேரம் கழிப்பதாகும். ஆனால் உறவுமுறையில் இருவர் சந்தித்து பேசுவதற்கு சில காரணம் இருக்கும் மற்றும் அவர்களுக்கு என்று சில கடமைகள் உண்டு. டேட்டிங் என்றால் உடலுறவு கொள்வது  என்று அர்த்தம் இல்லை.

டேட்டிங் செய்வதற்கான காரணம்:

திருமணத்திற்கு முன்பு இருவரும் டேட்டிங் செய்வார்கள். டேட்டிங் முடிந்த பின்பு இருவருக்கும்  ஒருவருக்கு மற்றவரை பிடித்து இருந்தாள் திருமணம் செய்து கொள்வார்கள். இல்லை என்றால் திருமணம் வேண்டாம் என்று ஒதுங்கி சென்றுவிடுவார்கள். எனவே டேட்டிங் என்பது திருமணத்திற்கு முன்பு இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு ஏற்ற வழியாக பலர் கருதுகிறார்கள்

டேட்டிங் செய்பவர்களின் வயது வரம்பு:

டேட்டிங் செய்வதற்கு இளம் வயதினராக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. வலிக்கும் வயதில்தான் டேட்டிங் செய்ய வேண்டும் என்று அர்த்தம் இல்லை.18-30 வயதில் செய்வதுதான் டேட்டிங் என்று பலர் தவறாக எண்ணுகிறார்கள். 50 வயதிற்கு மேல் உள்ளவர்களும் டேட்டிங் செல்கிறார்கள். எனவே ஒருவருக்கு மற்றவரை பிடித்திருந்தால் எந்த வயதிலும் டேட்டிங் செய்யலாம். தனக்கு என்று எந்தக் கடமையும் இல்லை என்பதாலும் மகிழ்ச்சியாக இருத்தல் மட்டுமே முக்கியம் என்று நினைப்பவர்கள் டேட்டிங் செய்வார்கள்.

50 வயது ஆகியவர்கள் பெரும்பாலும் திருமணம் ஆனவர்கள் ஆகத்தான் இருப்பார்கள். அல்லது அவர்களுக்கு என்று சில உறவுகள் இருக்கும். எனவே அந்த வயதில் டேட்டிங் செய்ய இயலாது என்று சிலர் நினைப்பார்கள்.  டேட்டிங் என்பது மறக்க முடியாத ஒரு செயலாகும். ஏனென்றால் அவர்கள் தம் இளம் வயதில் டேட்டிங் செய்திருப்பார்கள். அந்த நினைவுகளை அடிக்கடி அவர்கள் நினைத்துப் பார்ப்பதால் அவர்களால் அதை மறக்க இயலாது. முன்பே செய்த ஒரு செயலை மறுபடியும் செய்வது கடினமான செயல் இல்லை.

டேட்டிங் செய்வதற்கான வழிகள்:

 50 வயது ஆகிவிட்டது என்று நினைக்காமல் இன்றும் தனக்கு 18 வயது தான் ஆகிறது என்று நினைத்தாள் டேட்டிங் செய்வது மிகவும் சுலபமான ஒன்றாகும். 50 வயது  உடையவர்கள் டேட்டிங் செய்வதற்காகவே சில தகவல் மையம் உண்டு. Stitch என்று ஒரு நிறுவனம் உள்ளது. அதன் வேலை துணை இல்லாமல் தவிர்ப்பவர்களுக்கு தகுந்த துணையாக ஒருவரை அறிமுகம் செய்வதாகும். மேலும் உண்மையான காதல் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உண்மையான காதலை தேடி தரும். 50 வயதில் டேட்டிங் செய்வது தவறு அல்ல. சிறந்த துணையை தேட கஷ்ட பட வேண்டாம். அந்த வேலையை ஸ்டிட்ச் நிர்வாகம் செய்கிறது. 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தான் டேட்டிங் சிறந்த முறையில் செய்கிறார்கள்.

பாடம் எடுப்பதால்:

 தனக்கு பிடித்த ஒரு செயலை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆடல் பாடல் அல்லது சில கலைகள் நன்கு அறிந்து இருந்தால் அதனை பிறருக்கு கற்றுக் கொடுப்பதற்கு பாடம் எடுக்க வேண்டும். அந்த பாடத்தை கவனிக்க வருபவர்கள் இருப்பார்கள் அவர்களில் சிலரை உங்களுக்கு பிடித்திருக்கும். அதில் ஒருவரை தேர்ந்தெடுத்து நீங்கள் டேட்டிங் செல்லலாம்.

குழுவில் சேரலாம்:

இந்த காலத்தில் பல குழுக்கள் உண்டு அதில் ஏதேனும் ஒன்றில் நாம் சேர்ந்து கொள்ளலாம் சேர்ந்த பின்பு அங்கு வருபவர்கள் எவரேனும் ஒருவரை தேர்ந்து எடுக்கலாம் எடுத்து அவருடன் டேட்டிங் செல்லலாம். 50plus.com  என்ற சைடில் தங்கள் பெயரை இணைத்து கொள்ளலாம். அதன் மூலம் சிலர் அறிமுகம் ஆவார்கள். அவருள் தனக்கு ஏற்ற ஒருவரை தேர்ந்தெடுத்து பழகி பார்க்கலாம். Ourtime.com என்னும் சைட் மிகவும் சிறந்த டேட்டிங் சைட் ஆக கருதப்படுகிறது.

எனவே டேட்டிங் செய்வதற்கு வயது அவசியம் இல்லை. மனம் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் தனக்கு பிடித்த வருடம் நேரம் செலவு செய்வதற்கும் செய்யும் ஒரு செயல் தான் டேட்டிங் என்பது. இந்த காலத்தில் டேட்டிங் என்பது ஒரு சாதாரண வார்த்தையாக உள்ளது. அதை சரியான முறையில் பயன்படுத்துவது தவறாக நினைப்பது அவரவர் மனதினை பொறுத்தது.

Related posts

கோடை கால வெயிலின் நோய்களின் பிடியில் இருந்து தப்பிப்பது எப்படி

N N

முதுகு மற்றும் கால்களை வலிமையாக்கும் பாதாங்குஸ்தாசனம்

N N

உடலை வலுப்படுத்தும் தோப்புக்கரணம்

N N