இலண்டனில் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட தமிழ் சிறுவன்!

இலண்டன் கால்பந்து போட்டியின் போது 12 வயதுடைய தமிழ் சிறுவன் ஒருவர் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என த காடியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சிறுவனை அங்குள்ள உள்ளூர் கால்பந்து சங்கம் ஆதரவளிக்காமைக்காக சிறுவனின் குடும்பத்தினர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு லண்டனில் உள்ள பிட்ஷாங்கர் எப்சி அணிக்காக 9 பேர் கொண்ட ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சதி பாலகுரு எனப்படும் இலங்கை பூர்வீகம் கொண்ட சிறுவன், பெனால்டி அடிக்க முயற்சித்த போது எதிரணியினரால் இனரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவரை இந்தியர் என கூறி மைதானத்தில் பலரும் அவமதித்துள்ளனர். எனினும் சதி பிரித்தானிய மற்றும் இலங்கை பூர்வீகத்தை கொண்டவர் ஆகும். ஆடுகளத்தில் ஆசியப் பின்னணியில் இருந்து வந்த ஒரே வீரர் சதி என்பவராகும். ஆசியப் பின்னணியைக் கொண்டிருந்து கால்பந்து வீரராக இருப்பதில் தனது வாய்ப்புகள் ஏற்கனவே 50 சதவீதம் குறைத்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் எனது விளையாட்டுகள் தொடரும். நான் எனது கவனத்தை போட்டியில் செலுத்துவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.