fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

விஷாலுடன் படப்பிடிப்புக்காக துருக்கி சென்ற தமன்னா

நடிகர் விஷால் மற்றும் தமன்னா இணைந்து முதலில் கத்திச் சண்டை படத்தில் நடித்திருந்தனர். படத்தின் நகைச்சுவை கதாபாத்திரத்தில் வடிவேலு, சூரி ஆகியோர் நடித்தனர். எதிர்பார்த்த அளவுக்கு படமானது வரவேற்பு பெறவில்லை. அப்படத்தை தொடர்ந்து சுந்தர். சி இயக்கத்தில் ஒரு படத்தில் இணைந்துள்ளார்கள் நடிகர் விஷால் மற்றும் தமன்னா. இப்படத்திற்கு பெயர் இன்னும் வைக்கவில்லை. படத்தின் ஆரம்ப வேலைகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், படக்குழு தற்போது துருக்கிக்கு சென்று படப்பிடிப்பை நடத்த உள்ளது.

விஷாலுடன் படப்பிடிப்புக்காக துருக்கி சென்ற தமன்னா

துருக்கியில் 50 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு முக்கிய காட்சிகள், சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் ஆகியவற்றை பற்றி படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  இந்தப் படத்தினைத் தொடர்ந்து தமன்னா விஷாலுடன் இணைந்து இன்னோரு புதிய படத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. அப்படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்க உள்ளார். அந்த படத்தில் தமன்னாவுக்கு வில்லத்தனமான கதாபாத்திரம் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related posts

பார்த்திபனின் ஹிட் படத்தில் நடிக்க போகும் சிம்பு, ரிஸ்க் எடுக்கும் பார்த்திபன்..!!

TamilTwin India

சிம்புவின் திருமணம் குறித்து கலங்கிய டி.ஆர்

N N

மாமனிதன் பட வெளியீடு எப்போது

N N