fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

காமெடி படத்தில் தமன்னா

இந்திய திரைபட நடிகையான தமன்னா கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவரின் பல படங்களை தொடர்ந்து அதே கண்கள் படத்தை இயக்கிய ரோகின் வெங்கடேசன் இயக்கவிருக்கும் திகில் கலந்த காமெடி படத்தில் தமன்னா முன்னணி கதாபாத்திரமாக நடிக்கிறார்

     தேவி படத்திற்கு பிறகு தேவி 2 படத்திலும் ஹாரர் கதையில் நடித்தவர் தமன்னா. இதில் தேவி படத்தில் மிரட்டலான பேயாக நடித்த அவர் தேவி-2 படத்தில் காமெடி கலந்த பேயாக நடித்து வருகிறார். இதை தொடர்ந்து ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் கலையரசன், ஜனனி, ஷிவதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம்  அதே கண்கள். இந்த படத்தின்  இயக்குநர் ரோகின் வெங்கடேசன் தனது அடுத்த படத்துக்கான கதையை, காமெடி பாணியில் உருவாக்கி இருக்கிறார். தற்போது இக்கதையில் நடிக்க தமன்னா சம்மதம் தெரிவித்துள்ளார்.

காமெடி படத்தில் தமன்னா

               இந்த படத்தில் நாயகியாக தமன்னா நடிக்கவில்லை. தனிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர். மேலும், தமன்னாவோடு நடிக்கவுள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க உள்ளது. இது தவிர சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து தமன்னா நடித்து வருகிறார்.

Related posts

கொரோனவால் பலியான பிரபல ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரூ ஜாக் !

TamilTwin India

மீண்டும் ஹிந்தி காஞ்சனா ரீ-மேக்கில் லாரன்ஸ்

N N

காதலனுக்காக ஏங்கி தவிக்கும் சீரியல் நடிகை !

TamilTwin India