fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

வில்லியாக நடிக்கும் தமன்னா

கல்லூரி படத்தின் முலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமான தமன்னா பல படங்களை நடித்து பிரபலமாக இருந்து வரும் நிலையில் தற்பொழுது நடிக்க இருக்கும் படத்தில் வில்லியாக நடிக்க உள்ளார்.

     தமன்னா கண்ணே கலைமானே படத்தைத் தொடர்ந்து  தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமன்னா தற்போது தெலுங்கில் தட் இஸ் மகாலட்சுமி, தமிழில் தேவி 2 என இரு படங்களில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். “2019 ஆம் ஆண்டில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதே என் விருப்பமாக உள்ளது என்று கூறியுள்ளார். முதன்மை காதப்பாத்திரத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று தமன்னா தெரிவித்துள்ளார்”

வில்லியாக நடிக்கும் தமன்னா

      பிரபல நடிகரான விஷால் உடன் இணைந்து கத்திச் சண்டை படத்தில் நடித்த அவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் படங்களில்  நடித்து வருகிறார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரம் அவருக்கு  கொடுக்கப்பட்டுள்ளது. இப்பொழுது தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான எப் 2 படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்படத்தக்கது. இதே சமயம் ஓம்கர் இயக்கத்தில் உருவாகும் ராஜு கரி காதி 3 திரைப்படத்தில் நடித்து வருகிறேன் என்று தமன்னா கூறியுள்ளார்.

Related posts

கங்கனாவை புகழும் விஷால், பகத்சிங் செய்ததற்கு ஒப்பானது நீங்கள் செய்த காரியம்..!!

TamilTwin India

கொரானாவால் வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் மகன், வருத்தத்தில் விஜய் !

TamilTwin India

கார்த்திக்கு கட்டளை இட்ட மணிரத்னம், பொன்னியின் செல்வன் அப்டேட்..!

TamilTwin India