fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

T R Son Embrace Islam -டி. ஆர் வீட்டில் மூன்றாவது மதம் :

ஆம்.. ஹிந்து மதத்தை சேர்த்த டி. ஆர் அவர்களின் மகள் கிறித்துவ மதத்தை தழுவி கணவரோடு, ஹைதெராபாத்தில் வசிக்கிறார். தற்போது, அவரின் இரண்டாம் மகனான குரள் அரசன் இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளார்.

இசை அமைப்பாளர் ஆன இவர், சிம்புவோடு சில படங்களில் தோன்றி இருக்கிறார். இவர் சில தினங்களுக்கு முன்னர் தந்தை டி ஆர் மற்றும் தாய் உஷா அவர்களின் முன் நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மசூதியில் இஸ்லாத்தை ஏற்றார்.

Kuralarasan in Mosque

இதனை பற்றி டி. ஆர் அவர்கள் கூறிய போது, நான் என் பிள்ளைகள் மீது மதத்தை திணிக்கவில்லை. அவர்களின் விருப்ப படி வாழ்க்கையை தேர்தெடுகிறார்கள். என்னை பொறுத்த வரை அனைத்து மதமும் ஒன்று தான். புனித மெக்காவில் உள்ள காபா படம் என் வீட்டு சுவற்றை அலங்கரிப்பதே இதற்கு சாட்சி என்றார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி இசை அமைப்பாளர் ஆன ஏ . ஆர். ரகுமான் இஸ்லாம் மதத்தை தழுவியவர். அது போல இசைஞானி இளையராஜாவின் மகனான யுவன் ஷங்கர் ராஜாவும், இஸ்லாமிய மதத்தை தழுவி அப்துல் ஹாலிக் என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். அந்த வரிசையில் இது நம்ப ஆளு படத்தின் இசை அமைபாளர் ஆன குறளரசன் மதம் மாறி பெயர் மாற்றம் செய்ய போவதாக தகவல்கள் வருகிறது.

இவரின் இசை அந்த அளவுக்கு வெற்றி அடையவில்லை என்றாலும், தனியாக ஆங்கில ஆல்பம் US பாடகர்களை வைத்து இயக்கியுள்ளார். இதன் பதிவு நியூ யார்க் நகரில் நடந்தது என்பது குறிப்பிட தக்கது.

இனி வாழ்வில் வெற்றி சிகரங்களை அடைய வாழ்த்துக்கள் !! இந்த உலகத்தில் எம்மதமும் சம்மதமே!

Related posts

வித்தியாசமான கேரெக்டர்களில் நடிக்கனும், மனம் திறந்த நடிகர் வர்கிஸ்!

TamilTwin India

சென்னை வந்து சேர்ந்த மணிமகேலையின் முதல் வீடியோ!

TamilTwin India

கவர்ச்சி உடையில் ஆத்மிகா, வைரலாகும் புகைப்படம் !

TamilTwin India