பிரித்தானிய மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட சுவிட்சர்லாந்து

பிரித்தானியா மற்றும் சுவிட்சர்லாந்து இரண்டும் நாடுகளும் லண்டனில் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

சுவிட்சர்லாந்தும் பிரித்தானியாவும் ஒரு முக்கியமான உடன்பாட்டை எட்டியுள்ளன. சுவிட்சர்லாந்தில் பணிபுரியும் பிரித்தானிய குடிமக்கள் மற்றும் சுவிட்சர்லாந்திற்கு வருகை தரும் பிரித்தானிய பயணிகளும் சுவிட்சர்லாந்தில் மருத்துவம், ஓய்வு ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்பு நலன்களிலிருந்து பயனடைய முடியும் என்று ஒப்பந்தம் கூறுகிறது. இந்த ஒப்பந்தத்தில் நேற்று லண்டன் சென்ற சுவிஸ் உள்துறை அமைச்சர் அலைன் பெர்செட் கையெழுத்திட்டார். மேலும் மக்கள் தங்கள் பங்களிப்பை ஏதாவது ஒரு நாட்டில் கொடுத்தால் போதும்.

அதாவது கட்டணங்களை ஏதாவது ஒரு நாட்டில் மட்டும் செலுத்தினால் போதுமானது என்று கூறப்பட்டுள்ளது. அதிலும் பிரெக்சிட்டினால் பணியாளர்கள், சுற்றுலா வருபவர்கள் மற்றும் வர்த்தகம் போன்றவற்றில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சுவிட்சர்லாந்தில் வாழும் பிரித்தானியர்களும், பிரித்தானியாவில் வாழும் சுவிட்சர்லாந்து மக்களும் பலன் பெற முடியும். குறிப்பாக 77,500 சுவிட்சர்லாந்து மற்றும் பிரித்தானியா குடிமக்கள் இரு நாடுகளிலும் வாழ்கிறார்கள் என்பதால் இருவருக்கும் பொருந்தும் ஒப்பந்தமாக உள்ளது.