
கொரோனா தொற்றை அடுத்து நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் தமிழர் தாயகமும் ஸ்தம்பித்து இருந்தது.

உலகம் முழுதும் கொரோனாவால் நெருக்கடி நிலை தோன்றி இருந்தாலும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் நிறுவனங்கள் பலவும் தாயகத்தில் உணவுக்காக கஷ்டப்படும் மக்களுக்கு நேரடியாக பலகோடி ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய உணவுப்பொருள்களை வழங்கியிருந்தன.

அந்தவகையில் சுவிட்சர்லாந்தின் தமிழ் வர்த்தகரான திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதனின் (சுவிஸ் நாதன்) பல மில்லியன் ரூபாய் நிதி உதவியுடன் அன்றாடம் உழைத்து வாழ்க்கையை கொண்டு நடாத்தும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருள்களுடன் குழந்தைகளுக்கான பால்மாவும் விநியோகம் செய்யப்பட்டன.

அதில் சில விபரங்கள் கீழே,
காரைநகரில் எல்லா கிராமசேவையாளர் பிரிவுகளிலும் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும்,
30.03.2020 கிளிநொச்சி புதுமுறிப்பு கிராமத்தில் 316 குடும்பங்களுக்கும்,
30.03.2020 கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் 630 குடும்பங்களுக்கும்,
01.04.2020 கிளிநொச்சி மாயவனூர் கிராமத்தில் 520 குடும்பங்களுக்கும்,
01.04.2020 கிளிநொச்சி தொண்டமாநகர் கிராமத்தில் 160 குடும்பங்களுக்கும்,
02.04.2020 கிளிநொச்சி ஆனைவிழுந்தான்,வன்னேரிக்குளம் கிராமங்களைச் சேர்ந்த 420 குடும்பங்களுக்கும்,
02.04.2020 கிளிநொச்சி பெரியபரந்தன், கிளிநகரம் கிராமங்களில் 322 குடும்பங்களுக்கும்,
03.04.2020 கிளிநொச்சி மாவடி அம்மன் கிராம அலுவலர் பிரிவுக்கு 320 குடும்பங்களுக்கும்,
03.04.2020 கிளிநொச்சி பெரியபரந்தன் கிராமத்தை சேர்ந்த 130 குடும்பங்களுக்கும்,
04.04.2020 கண்டாவளை பிரதேச செயலர் பிரிவை சேர்ந்த 500 குடும்பங்களுக்கும்,
அத்தியாவசிய உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவர் வழங்கிய உதவிகளின் மிக சொற்பமான விபரங்களே மேலே உள்ளது.
அவர் இன்னமும் போரால் பாதிக்கப்பட்ட வன்னிப் பெருநிலப்பரப்பில் பல்வேறு உதவித் திட்டங்களையும் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
