சுதுமலை புவனேஸ்வரி அம்பாளுக்கு நாளை கொடியேற்றம்(Photos)

யாழ்.மாவட்டத்தில் அமைந்துள்ள புராதன அம்பாள் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழா நாளை சனிக்கிழமை (28.5.2022) முற்பகல்-11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ச்சியாகப் பதினெட்டுத் தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருந் திருவிழாவில் அடுத்தமாதம்-13 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள்-14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் மாலை-5.30 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் நடைபெறும் எனவும் மேற்படி ஆலய தர்மகர்த்தா சபையினர் தெரிவித்துள்ளனர். .

இதேவேளை, காலை, மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருந் திருவிழாவில் காலை உற்சவம் காலை-7 மணிக்கு காலைப் பூசையுடனும், மாலை உற்சவம் மாலை-4.30 மணிக்கு சாயரட்சைப் பூசையுடனும் ஆரம்பமாகவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)