fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ஜி.வி.பிரகாஷின் பாடல்களுக்கு சூர்யா பாராட்டு

சுதா கொங்கராவின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் படத்தின் பாடல்களைக் கேட்டுவிட்டு, ஜி.வி பிரகாஷை வெகுவாகப் பாராட்டியுள்ளார் நடிகர் சூர்யா.

     என்.ஜி.கே செல்வராகவன் இயக்கத்திலும், காப்பான் கே.வி.ஆனந்த் இயக்கத்திலும் உருவாகும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதில் முதலாவதாக மே 31-ம் தேதி என்.ஜி.கே திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படத்தை சூர்யா தயாரித்து நடிக்கவுள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்து அத்தனை பாடல்களையும் முடித்துக் கொடுத்துவிட்டார். தற்போது படப்பிடிப்பு தொடங்குவதற்காக பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஜி.வி.பிரகாஷின் பாடல்களுக்கு சூர்யா பாராட்டு

     ஜி.வி.பிரகாஷ்  முடித்த பாடல்கள் அனைத்தையும் கேட்ட சூர்யா, ஜி.வி.பிரகாஷை பாராட்டியுள்ளார். அவருக்கு ஒரு பெரிய பூங்கொத்து கொடுத்து அனுப்பி அதில் “ஜிவி ப்ரோ, பாடல் கேட்டு சிலிர்த்துவிட்டேன். அட்டகாசமான பாடல்கள்” என்று தன் கைப்பட எழுதியிருக்கிறார். இதனை புகைப்படம் எடுத்து ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related posts

குஷ்புவை தொடர்ந்து பா.ஜா.கவில் இணையும் பிரபலம், வைரலாகும் பதிவு..!!

TamilTwin India

தேர்தலில் போட்டியிடும் தாடி பாலாஜி மனைவி நித்யா

N N

காமெடி நடிகர் சூரியின் ட்விட், வைரலாகும் போட்டோக்கள் !

TamilTwin India