fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தில் சூர்யா

                நடிகர் சூர்யா நமது தமிழக அரசுடன் இணைந்து பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படம் ஒன்றில் நடித்து உள்ளார்.  இக்குறும்படத்தினை யூடியுப்பிலும் வெளியிட்டு உள்ளார்.  இப்படம் பிளாஸ்டிக் உபயோகப்படுத்துபவர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தில் சூர்யா

      தமிழகத்தில் ஜனவரி 1 – ம் தேதி பிளாஸ்டிக் உபயோகப்படுத்தக் கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அதிகப்படியான கடைகளில் பிளாஸ்டிக் உபயோகம் குறைந்தாலும் ஒரு சில இடங்களில் இன்னும் பிளாஸ்டிக் உபயோகப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள்.  பிளாஸ்டிக் உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகளை இப்படத்தின் மூலம் எடுத்து உரைக்கின்றனர்.  குழந்தைகளுக்கு எடுத்து கூறுவது போல இப்படம் அமைந்து உள்ளது. “மாற்றலாம் மாற்றலாம்” என்ற பெயரில் இக்குறும்படம் வெளியிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.  இதனை நடிகர் சூர்யாவின் சொந்த நிறுவனமான 2டி நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்.  இக்குறும்படத்தினை ஹரிஷ் இயக்கி உள்ளார்.  இதனை ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

Related posts

ராட்சசி படக்குழுவினருக்கு விருந்து கொடுத்த மாஸ்லே மாலிக்

N N

ட்விட்டரில் ரசிகர்களுக்கு நன்றி கூறிய கவின், வைரலாகும் பதிவு!

TamilTwin India

வெளியாகிறது டாக்டர் படத்தின் அப்டேட், ஃபர்ஸ்ட் சிங்கிலுக்கான தகவல் இதோ..!

TamilTwin India